Categories
தேசிய செய்திகள்

இந்த 16 மருந்துகளை வாங்க இனி…. பரிந்துரை சீட்டு தேவையில்லை…. வெளியான அதிரடி அறிவிப்பு….!!!

மத்திய சுகாதார அமைச்சகம் கடந்த 1945ஆம் ஆண்டு மருந்து விற்பனையில் பல புதிய மாற்றங்களை கொண்டுவந்தது. அதன்படி மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே சில மருந்துகளை விற்பனை மையங்களில் பொதுமக்கள் வாங்க முடியும். அது மட்டுமல்லாமல் சில மருந்துகளை மட்டும் சில்லறை விற்பனையில் விற்பதற்கு அனுமதி வழங்கியது.

மேலும் மருத்துவரிடம் மருந்து பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மருத்துவ ரீதியாக சில பிரச்சனைகள் இருந்தால் மருந்து பரிந்துரைச் சீட்டு இருந்தால் மட்டுமே மருந்துகளை வாங்குவதற்கும் விற்பனை செய்யவும் அனுமதி உண்டு. இந்த மருந்து விற்பனையில் தற்போது சில மாற்றங்களை கொண்டு வருவதற்கு ஒன்றிய சுகாதார அமைச்சகம் முடிவு செய்தது.

அதன்படி தலைவலி, காய்ச்சல்,சளி போன்ற அடிப்படை மருந்து தேவைகளை மட்டும் மருத்துவரின் பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்கிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டது. அந்த மருந்துகளின் பட்டியலில் பாராசிட்டமால் உட்பட 16 அடிப்படை பொது மருந்துகள் சேர்க்கப்பட்டுள்ளன. அதிலும் குறிப்பாக கிருமி நாசினி,இரு அலர்ஜி சிகிச்சைக்கு பயன்படுத்தப்படும் மவுத்வாஷ் குளோரோஹெக்சிடின் , பாக்டீரியா எதிர்ப்பு முகப்பரு மருந்து, பூஞ்சை கிரீம்கள்,வலி நிவாரணி மருந்துகள் ஆகியவை மருந்துகளை மருந்து பரிந்துரை சீட்டு இல்லாமல் வாங்கிக்கொள்ள முடியும்.

அதிலும் குறிப்பாக இந்த மருந்துகளை நோயாளிகள் ஐந்து நாட்களுக்கு மேல் பயன்படுத்தக் கூடாது எனவும் அறிவுறுத்தியுள்ளது. எனவே பாராசிட்டமால் உட்பட 16 அடிப்படைத் தேவைகளுக்கான மருந்துகளை மருத்துவரின் பரிந்துரைச் சீட்டு இல்லாமல் மக்கள் வாங்கிக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |