Categories
மாநில செய்திகள்

வீடு தேடி வந்து கடன் கொடுக்கும் சூப்பரான திட்டம்…. அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்….!!!

அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது.

இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதை கொண்டாடும் விதமாக அமிர்த மகார்த்சேவம் என்ற பெயரில் பல்வேறு விதமான சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அனைத்து மாவட்டங்களிலும் சிறப்பு முகாம்கள் நடைபெற்றுள்ளது. இந்த முகாம்கள் பொதுத்துறை வங்கிகளின் சார்பாக நடத்தப்பட்டது. இதில் பொது மக்களுக்கு கடன் வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இதனையடுத்து பொதுமக்களுக்கு கடன் வழங்குவது தொடர்பான அனைத்து கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் தீர்வு காணப்பட்டது.

அதன்பிறகு பொதுமக்கள் பல்வேறு அரசுத் திட்டங்களில் சேர்தல், பிரதமர் நரேந்திர மோடியின் அடல் பென்ஷன் திட்டம், பிரதமரின் சுரக்ஷா பீமா யோஜனா, பிரதமரின் ஜீவன் பீமா ஜோதி யோஜனா போன்ற திட்டங்களில் பதிவு செய்தல் போன்றவைகளும் மக்களுக்காக செய்யப்பட்டது. மேலும் இந்த திட்டமானது  நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களில் இருக்கும் மக்களுக்கு கொண்டு செல்லும் நோக்கத்தோடு நடத்தப்பட்டுள்ளது.

Categories

Tech |