Categories
நீலகிரி மாவட்ட செய்திகள்

காட்டு யானைகளை பிடிப்பதற்காக….”வசிம், கலிம் என்று 2 கும்கி யானைகள் வரவழைப்பு….!!!!

காட்டு யானைகளை பிடிப்பதற்காக கூடுதலாக இரண்டு கும்கி யானைகள் கொண்டு வரப்பட்டுள்ளது.

நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுபாறையில் வசித்த ஆனந்த குமார் என்பவர் கடந்த மாதம் 26ம் தேதி காட்டுயானை தாக்கி கொன்று உள்ளது. இதை தொடர்ந்து பாரம் பகுதியில் மற்றொரு காட்டுயானை தாக்கி மும்தாஜ் என்பவர் பலியாகி உள்ளார். இதனால் காட்டு யானைகளை பிடிப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். இதனை அடுத்து முதுமலையிலிருந்து விஜய், சங்கர், கிருஷ்ணா, சீனிவாசன் கும்கி யானைகள் உடனடியாக கொண்டு வரப்பட்டு காட்டு யானைகளை தேடும் பணி நடந்தது.

அதன்பின் கிளன்வன்ஸ், பாரதிநகர், ஆரோட்டு பாறை என காட்டு யானைகள் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு இடம் மாறி முகாமிட்டு இருப்பது தெரியவந்துள்ளது. இதனால் கும்கி யானைகளின் உதவியுடன் வனத்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். மேலும் முதுமலை கால்நடை மருத்துவர் ராஜேஷ் குமார் தலைமையில் மருத்துவ குழுவினரும், வனத்துறையினரும் சேர்ந்து காட்டு யானைகளை பிடிக்க திட்டமிட்டுள்ளனர்.

இந்நிலையில் முதுமலையிலிருந்து வசிம் என்ற கும்கி யானையும், கோவையிலிருந்து கலீம் என்ற கும்கி யானையும் கூடுதலாக நேற்று முன்தினம் ஆரோட்டுபாறைக்கு லாரியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து சில நாட்களில் காட்டு யானைகள் பிடிக்கும் பணி ஆரம்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Categories

Tech |