Categories
நீலகிரி பல்சுவை மாவட்ட செய்திகள்

“மல்லாக்க படுத்து விட்டத்த பாக்குறது என்னா சுகம்” வடிவேல் காமெடியை தத்ரூபமாக காட்டிய கரடி….!!!!

நீலகிரி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சிறுத்தை, கரடி, யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. அதிலும் குறிப்பாக இந்த வனவிலங்குகள் உணவைத் தேடி ஆள் நடமாட்டம் உள்ள ஊர் பகுதிக்குள் புகுந்து வருவது வழக்கம். அதேபோல சாலையில் யானைகள் மற்றும் கரடிகளும் வருவது வழக்கம். இந்த நிலையில் தற்போது ஊட்டி அடுத்த பந்திப்பூர் என்னுமிடத்தில் கரடி ஒன்று சாலையோரமாக படுத்துக்கொண்டு வானத்தை நோக்கி எதையோ யோசித்துக் கொண்டிருக்கிறது.

இந்த படத்தை பார்ப்பதற்கு வின்னர் படத்தில் வரும் வடிவேல் காமெடி போல மல்லாக்க படுத்து விட்டத்தை பாக்கறது எவ்வளவு சுகம் என்று அந்த கரடி கூறுவது போல இருக்கிறது. இந்த காட்சியை அந்த வழியாக காரில் வந்த ஒருவர் தனது செல்போனில் வீடியோ எடுத்து அதை சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார். சுட்டித்தனமான இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Categories

Tech |