Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 24 மணி நேரமும் கடைகள் திறப்பு…. விதிமுறைகள் என்னென்ன…? முழு லிஸ்ட் இதோ….!!!!

தமிழ்நாட்டில் கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம், கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களை 24-மணி நேரமும் திறக்க, தமிழக அரசு அனுமதி அளித்தது. இதற்கான அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் இதனை தொடர்ந்து 6-மாதம் மட்டுமே இந்த உத்தரவை அமல்படுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில்,கொரோனா தொற்றின்  காரணமாக கடைகள் திறக்கும் நேரமானது குறைக்கப்பட்டது. இதையடுத்து குறிப்பிட்ட நேரம் மட்டுமே கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில், தமிழகத்தில் கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24-மணி நேரமும் செயல்பட மீண்டும் அனுமதி அளித்து, தமிழக அரசு உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. இதையடுத்து கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட அரசாணையில், கடைகளை 24-மணி நேரமும், திறக்க 3-ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இதற்கான காலக்கெடு, ஆண்டுடன் முடிவடைந்து விட்டதால், 3-ஆண்டுகளுக்கு இதனை நீட்டித்தும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, கடந்த 5-ஆம் தேதி முதல் இந்த உத்தரவு மீண்டும் அமலுக்கு வருவதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதனை தொடர்ந்து தமிழகத்தில் உள்ள கடைகள் மற்றும் வணிக நிறுவனங்கள் 24-மணி நேரமும் செயல்படுகின்ற விதிமுறைகளும் வகுக்கப்பட்டுள்ளன. அதன்படி, ஒரு நாளைக்கு, 8-மணி நேரம் அல்லது வாரத்திற்கு, 48-மணி நேரத்திற்கு மேல் யாரையும் பணியில் ஈடுபடுத்தக் கூடாது. மேலும் 24-மணி நேரம் செயல்படும் கடைகள் ஒவ்வொரு பணியாளருக்கும், சுழற்சி முறையில் வாரத்தில் ஒரு நாள் விடுப்பு அளிக்க வேண்டும். இந்நிலையில் ஊழியர்கள் குறித்த தகவல்கள், அனைவரின் பார்வையில் படும் இடத்தில் வைக்க வேண்டும். இதையடுத்து கூடுதல் நேரம் வேலை பார்த்தால், கூடுதல் ஊதியமானது வழங்க வேண்டும்.

இந்நிலையில் பெண்கள் பணியாற்ற வேண்டி இருந்தால், எழுத்துபூர்வமாக சம்மதம் பெற்ற பின், பணியில் ஈடுபடுத்த வேண்டும். மேலும் பணியில் இருக்கும் பெண்களுக்கு தகுந்த பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து வசதி செய்து தரப்பட வேண்டும். இதனை தொடர்ந்து, தொழிலாளர்களுக்கு கழிவறை மற்றும் ஓய்வறை உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளையும் ஏற்படுத்தி தர வேண்டும். இவ்வாறு பணியிடங்களில் ஏற்படும் பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கு, விசாரணை குழுவை கண்டிப்பாக அமைக்க வேண்டும். மேலும் விதிமுறைகள் மீறப்பட்டால், கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Categories

Tech |