தொட்டில் கயிறு அறுந்து விழுந்ததால் 3 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டத்தில் உள்ள செங்கப்படை கிராமத்தில் சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு புனிதா என்ற மனைவி உள்ளார். இந்த தம்பதியினருக்கு பிரியதர்ஷினி 3 மாத பெண் குழந்தை இருந்துள்ளது. கடந்த 1-ஆம் தேதி புனிதா குழந்தையை தொட்டிலில் போட்டு தூங்க வைப்பதற்காக தாலாட்டியுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக தொட்டில் கயிறு அறுந்து வளர்ந்ததால் பிரியதர்ஷினிக்கு படுகாயம் ஏற்பட்டது.
இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக குழந்தையை மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பிரியதர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தாள். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.