சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த நபர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள வல்லத்திராகோட்டையில் கணேசன்(55) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் இருக்கின்றனர். இந்நிலையில் கணேசன் அதே பகுதியில் வசிக்கும் 9-ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் புதுக்கோட்டை டவுன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கணேசனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.