Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“மோட்டார் சைக்கிளில் பயணித்த போது கண்ணில் பட்ட சிகரெட் சாம்பல்”…. தட்டிக்கேட்ட வாலிபர் அடித்துக்கொலை…!!!!!

சிகரெட்டின் சாம்பல் கண்ணில் பட்டதால் இருதரப்பினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணத்தை அடுத்து இருக்கும் கொட்டையூர் பகுதியை சேர்ந்த பிரகாஷ் என்பவர் தனது நண்பன் சந்தோஷ் உடன் இருசக்கர வாகனத்தில் வளையப்பேட்டை வழியாகச் சென்றுகொண்டிருந்த பொழுது இவர்களுக்கு முன்னால் சென்ற மோட்டார் சைக்கிளில் புகை பிடித்தபடியே சென்றிருக்கின்றனர். அப்போது சிகரெட்டின் சாம்பல் பின்னால் வந்து கொண்டிருந்த பிரகாஷின் நண்பர் சந்தோஷ் கண்ணில் பட்டு இருக்கின்றது.

இதனால் பிரகாஷ், சந்தோஷ் முன்னால் சென்றுகொண்டிருந்த வாகனத்தை வழிமறித்து தட்டி கேட்டிருக்கின்றனர். இதனால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டு இருக்கின்றது. அப்போது பிரகாஷ் மற்றும் சந்தோஷ் புகைபிடித்தவரை தாக்கி இருக்கின்றனர். அடி வாங்கிய நபர் தனது நண்பர்களுக்கு போன் செய்துள்ளார். இதையடுத்து விரைந்து வந்த அவரின் நண்பர்கள் பிரகாஷ் மற்றும் சந்தோஷை தாக்கி இருக்கின்றனர். இதில் பிரகாஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதை அடுத்து சந்தோஷ் புகார் கொடுத்தையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றார்கள்.

 

Categories

Tech |