ஏழாம் வகுப்பு படிக்கும் சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றார்கள்.
திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ஜமுனாமரத்தூர் பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் என்பவர் ஏழாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமியை காதலித்து ஆசைவார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததாக சொல்லப்படுகின்றது.
இந்நிலையில் சென்ற சில நாட்களுக்கு முன்பாக சிறுமிக்கு உடல் நலக் குறைபாடு ஏற்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சென்று பரிசோதித்த போது சிறுமி கர்ப்பமாக இருப்பது தெரியவந்ததையடுத்து ஆரம்ப சுகாதார நிலையத்தில் இருந்து அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
இதையடுத்து குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் அங்கு வந்து சிறுமியை மீட்டு வரவேற்பு இல்லத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை செய்தார்கள். இது பற்றி போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டதின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து ராஜேஷை வலைவீசி தேடி வருகிறார்கள்.