இன்றைய தின நிகழ்வுகள்
கிமு 53 – உரோமைப் பேரரசர் நீரோ குளோடியா ஒக்டாவியாவைத் திருமணம் புரிந்தான்.
68 – உரோமைப் பேரரசன் நீரோ தற்கொலை செய்து கொண்டான். ஜூலியோ குளாடிய மரபு முடிவுக்கு வந்து, நான்கு பேரரசர்களின் ஆண்டு என அழைக்கப்பட்ட உள்நாட்டுப் போர் ஆரம்பமானது.
747 – அப்பாசியரின் புரட்சி: அபூ முசுலிம் கொரசானி உமையாதுகளுக்கு எதிராகக் கிளர்ச்சியை ஆரம்பித்தான்.
1534 – இழ்சாக் கார்ட்டியே செயின்ட் இலாரன்சு ஆற்றின் வரைபடத்தை வரைந்தார்.
1667 – இரண்டாவது ஆங்கிலேய-இடச்சுப் போர்: மெட்வே மீதான இடச்சுக் கடற்படையின் தாக்குதல் ஆரம்பமானது. அரச கடற்படை வரலாறு காணாத தோல்வி கண்டது.
1762 – பிரித்தானியப் படைகள் அவானா மீதான தாக்குதலை ஆரம்பித்தது. ஏழாண்டுப் போர்க் காலத்தில் நகரைக் கைப்பற்றியது.
1772 – பிரித்தானியப் பாய்க்கப்பல் காசுப்பீ உரோட் தீவில் தீக்கிரையானது.
1815 – வியன்னா மாநாடு முடிவடைந்தது. புதிய ஐரோப்பிய அரசியல் நிலப்படம் மாற்றமடைந்தது.
1815 – லக்சம்பர்க் பிரெஞ்சுப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
1885 – சீன-பிரெஞ்சுப் போரை முடிவுக்குக் கொண்டுவர தியென்ட்சின் உடன்பாடு எட்டப்பட்டது. சிங் சீனா தொங்கின், அன்னாம் ஆகிய மாகாணங்களை (இன்றைய வியட்நாமில்) பிரான்சுக்குக் கொடுத்தது.
1900 – இந்தியத் தேசியவாதி பிர்சா முண்டா பிரித்தானிய சிறையில் வாந்திபேதியினால் இறந்தார்.
1903 – அநுராதபுரத்தில் இடம்பெற்ற கலவரத்தில் கத்தோலிக்க ஆலயம் ஒன்று பௌத்தர்களினால் சேதமாக்கப்பட்டு மதகுரு தாக்கப்பட்டார். 40 பேர் கைது செய்யப்பட்டனர்.[1]
1923 – பல்கேரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றியது.
1928 – ஆத்திரேலியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் முதற்தடவையாக சார்லசு கிங்சுபோர்ட் சிமித் வானூர்தியில் கடந்தார்.
1935 – வடமேற்கு சீனாவில் சப்பானியரின் ஆக்கிரமிப்பை சீனக் குடியரசு அங்கீகரித்தது.
1936 – யாழ்ப்பாண நகரசபைக் கட்டடத்தை இலங்கை மகாதேசாதிபதி சேர் ரெஜினால்ட் எட்வர்ட் ஸ்ரப்சு திறந்து வைத்தார்.[2]
1944 – இரண்டாம் உலகப் போர்: பிரான்சில் தூலி என்ற இடத்தில் 99 பொது மக்கள் செருமனியப் படையினரால் படுகொலை செய்யப்பட்டனர்.
1944 – இரண்டாம் உலகப் போர்: பின்லாந்து 1941 முதல் கைப்பற்றி வைத்திருந்த கரேலியா பகுதியினுள் சோவியத் ஒன்றியம் ஊடுருவியது.
1946 – பூமிபால் அதுல்யாதெச்சு தாய்லாந்தின் மன்னராக முடி சூடினார்.
1953 – அமெரிக்காவின் மாசச்சூசெட்ஸ் மாநிலத்தை சூறாவளி தாக்கியதில் 94 பேர் உயிரிழந்தனர்.
1959 – முதலாவது அணுக்கரு ஆற்றல் ஏவுகணை நீர்மூழ்கி ஜார்ஜ் வாசிங்டன் வெள்ளோட்டம் விடப்பட்டது.
1962 – தங்கனீக்கா குடியரசாகியது.
1967 – ஆறு நாள் போர்: இசுரேல் சிரியாவிடம் இருந்து கோலோன் குன்றுகளைக் கைப்பற்றியது.
1972 – அமெரிக்காவின் தெற்கு டகோட்டாவில் பெரும் மழை காரணமாக அணை ஒன்று உடைந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதில் 238 பேர் உயிரிழந்தனர்.
1979 – சிட்னியில் லூனா பூங்காவில் சிறிய தொடருந்து ஒன்று தீப்பற்றியதில் ஏழு பேர் உயிரிழந்தனர்.
1999 – கொசோவோ போர்: செர்பியா-மொண்டெனேகுரோ நேட்டோவுடன் அமைதி உடன்பாட்டில் கையெழுத்திட்டது.
2009 – பாக்கித்தான், பெசாவரில் உணவு விடுதி ஒன்றில் குண்டு வெடித்ததில் 17 பேர் கொல்லப்பட்டனர்.
2010 – ஆப்கானித்தான், காந்தகாரில் திருமண வீடொன்றில் சிறுவன் ஒருவன் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில் 40 பேர் கொல்லப்பட்டனர், 70 பேர் காயமடைந்தனர்.
இன்றைய தின பிறப்புகள்
1781 – ஜார்ஜ் ஸ்டீபென்சன், ஆங்கிலேயப் பொறியியலாளர், நீராவிப் பொறியைக் கண்டுபிடித்தவர் (இ. 1848)
1812 – யோகான் கோட்பிரீடு கல்லே, செருமானிய வானியலாளர் (இ. 1910)
1845 – நான்காம் மிண்டோ பிரபு, இந்தியாவின் 36வது பிரித்தானிய ஆளுநர் (இ. 1914)
1898 – பள்ளியகரம் நீ. கந்தசாமிப் புலவர், தமிழகப் புலவர் (இ. 1977)
1917 – எரிக் ஹாப்ஸ்பாம், எகிப்திய-ஆங்கிலேய வரலாற்றாளர் (இ. 2012)
1931 – நந்தினி சத்பதி, ஒடிசாவின் 8வது முதலமைச்சர் (இ. 2006)
1937 – இராமச்சந்திர காந்தி, இந்திய மெய்யியல் அறிஞர் (இ. 2007)
1943 – சி. மௌனகுரு, இலங்கை அரங்க ஆய்வாளர், பயிற்சியாளர், இயக்குநர், கல்வியாளர்
1949 – கிரண் பேடி, இந்தியக் காவல்துறை அதிகாரி, செயற்பாட்டாளர்
1951 – டி. சகுந்தலா, தென்னிந்தியத் திரைப்பட நடிகை (இ. 2014)
1951 – ஜேம்ஸ் நியூட்டன் ஹவார்ட், அமெரிக்க இசையமைப்பாளர், தயாரிப்பாளர்
1952 – யூசஃப் ரசா கிலானி, பாக்கித்தான் அரசியல்வாதி
1954 – எலிசபெத் மே, அமெரிக்க-கனடிய சுற்றுச்சூழலியலாளர், அரசியல்வாதி
1963 – ஜானி டெப், அமெரிக்க நடிகர்
1975 – ஆன்ட்ரூ சைமன்ஸ், ஆத்திரேலியத் துடுப்பாட்ட வீரர் (இ. 2022)
1977 – அமீஷா பட்டேல், இந்திய நடிகை
1977 – உஸ்மான் அப்சால், பாக்கித்தானிய-ஆங்கிலேயத் துடுப்பாட்ட வீரர்
1981 – நேடலி போர்ட்மன், இசுரேலிய-அமெரிக்க நடிகை
1981 – அனுஷ்கா சங்கர், ஆங்கிலேய-இந்திய சித்தார் கலைஞர்
1985 – சோனம் கபூர், இந்திய நடிகை
இன்றைய தின இறப்புகள்
373 – சிரியனான எபிரேம், துருக்கிய இறையியலாளர் (பி. 306)
1716 – பண்டா சிங் பகதூர், இந்தியத் தளபதி (பி. 1670)
1834 – வில்லியம் கேரி, ஆங்கிலேய மதப்பரப்புனர் (பி. 1761)
1870 – சார்லஸ் டிக்கின்ஸ், ஆங்கிலேய எழுத்தாளர் (பி. 1812)
1871 – அன்னா அட்கின்சு, ஆங்கிலேயத் தாவரவியலாளர், ஒளிப்படக் கலைஞர் (பி. 1799)
1897 – ஆல்வன் கிரகாம் கிளார்க், அமெரிக்க வானியலாளர் (பி. 1832)
1900 – பிர்சா முண்டா, இந்திய விடுதலைப் போராட்ட வீரர் (பி. 1875)
1959 – அடால்ஃப் வின்டாசு, நோபல் பரிசு பெற்ற செருமானிய வேதியியலாளர் (பி. 1876)
1970 – எம். ஐ. எம். அப்துல் மஜீத், இலங்கை அரசியல்வாதி (பி. 1919)
1981 – குடந்தை ப. சுந்தரேசனார், தமிழகப் பண்ணாராய்ச்சியாளர் (பி. 1914)
1995 – கொகினேனி ரங்க நாயுகுலு, இந்திய விடுதலைப் போராட்ட செயற்பாட்டாளர், அரசியல்வாதி (பி. 1909)
2011 – மக்புல் ஃபிதா உசைன், இந்திய ஓவியர், இயக்குநர் (பி. 1915)
2013 – கே. டி. பிரான்சிஸ், இலங்கைத் துடுப்பாட்ட நடுவர் (பி. 1939)
இன்றைய தின சிறப்பு நாள்
தேசிய வீரர்கள் நாள் (உகாண்டா)