Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

10 ஆம் வகுப்பு மாணவியிடம்….. ஆசிரியர்கள் கொடுஞ்செயல்….. தூக்கிட்டு தற்கொலை….. தூத்துக்குடி அருகே சோகம்…!!

தூத்துக்குடி அருகே ஆசிரியர்களின் கொடுஞ்செயலால் விரக்தி அடைந்த மாணவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் பகுதியை அடுத்த செய்துங்கநல்லூரில் வசித்து வருபவர் பெருமாள். இவர் அதே பகுதியில் உள்ள செங்கல் சூளையில் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவரது மகள் பேச்சியம்மாள். அருகிலுள்ள பாளையங்கோட்டையில் இயேசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வந்துள்ளார்.

இந்நிலையில் பேச்சியம்மாள் அரையாண்டு தேர்வில் மதிப்பெண் குறைவாக எடுத்ததன் காரணமாக அவரது பெற்றோரை பள்ளிக்கு வரவழைத்து ஒரு மணி நேரம் நிற்க வைத்து பேச்சியம்மாள் குறித்து கடுமையாக பேசி வேறு பள்ளியில் சேர்க்குமாறு அறிவுரை செய்துள்ளார். இதை மீறியும் பேச்சியம்மாள் தொடர்ந்து பள்ளிக்கூடத்திற்கு சென்று வந்துள்ளார்.

இதனால் கோபம் கொண்ட ஆசிரியர்கள் அவரை நாள்தோறும் திட்டி துன்புறுத்தியுள்ளனர். இந்நிலையில் நேற்றையதினம் பள்ளிக்குச் சென்ற பேச்சியம்மாளை ஒரு படி எல்லை மீறிய ஆசிரியர்கள் அவரை அடித்து விரட்டிஉள்ளனர். இதனால் விரக்தியடைந்த பேச்சியம்மாள் வீட்டிற்கு வந்து ஆளில்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

பின் இது குறித்து காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்து அவர்கள் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து பின் உடலை உறவினர்களிடம் ஒப்படைக்க, அவர்கள் வாங்க மறுத்து உடனடியாக பாளையங்கோட்டையில் உள்ள மாணவியின் பள்ளிக்கு சென்று முற்றுகைப் போராட்டம் நடத்தி ஆசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகம் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினர்.

பின் இதுகுறித்து தகவல் அறிந்து வந்த பாளையங்கோட்டை காவல் நிலைய அதிகாரிகள் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து பள்ளி தலைமையாசிரியர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |