தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக (09-06-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. அதன்படி கோவை பீளமேடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் கீழ்க்கண்ட பகுதிகளில் ஜூன் 9ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்சார விநியோகம் இருக்காது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: ஆா்கஸ் பீடா், பெருமாள் கோயில் பீடா், ரங்கவிலாஸ் மில் பீடா், எஸ்ஆா்சி பீடா், பாரதி நகா் பீடா், பிஎஸ்ஜி பீடா், ஜெயலட்சுமி மில் பீடா், ராமநாதபுரம் பீடா், பீளமேடு பீடா், ஆா்.கே.புரம் பீடா், புலியகுளம் பீடா், லட்சுமி மில் பீடா், சௌரிபாளையம் பீடா், உடையாம்பாளையம் பீடா் ஆகியவற்றுக்குள்பட்ட பகுதிகளில் மின்சார விநியோகம் தடைபடும்.
கல்லிடைகுறிச்சி மின் கோட்டத்துக்கு உட்பட்ட விக்கிரமசிங்கபுரம் மற்றும் ஆழ்வார்குறிச்சி ஆகிய துணை மின் நிலையங்களில் 9-ந்தேதி மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்க உள்ளன. எனவே அங்கு இருந்து மின்வினியோகம் பெறும் காரையாறு, சேர்வலார், பாபநாசம், வி.கே.புரம், சிவந்திபுரம், அடையகருங்குளம், ஆறுமுகபட்டி, முதலியார்பட்டி, ஆழ்வார்குறிச்சி, கருத்தபிள்ளையூர், ஏ.பி.நாடானூர், துப்பாக்குடி, கலிதீர்த்தான்பட்டி, பொட்டல்புதூர், ஆம்பூர், பாப்பான்குளம் பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது. இந்த தகவலை கல்லிடைகுறிச்சி மின்வினியோக செயற்பொறியாளர் சுடலையாடும்பெருமாள் தெரிவித்து உள்ளார்.