டெல்லியைச் சேர்ந்த ஒரு தாய் தன்னுடைய ஐந்து வயது குழந்தை வீட்டுப்பாடம் செய்யாததால் குழந்தையின் கை, கால்களை கட்டி மொட்டைமாடியில் வெயில் உள்ள இடத்தில் படுக்க வைத்த கொடுமை அரங்கேறியுள்ளது. பெற்ற பிள்ளையை அதன் தாயே இப்படி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இதனை தூரத்தில் ஒரு ஒருவர் வீடியோவாக எடுத்து இணையதளத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவில் குழந்தையின் கதறல் சத்தம் பார்ப்பவர்களின் நெஞ்சை பதற வைக்கிறது. இந்த சம்பவம் குறித்து அறிந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.