இன்றைய காலகட்டத்தில் உணவுப்பொருட்களில் பல்வேறு கலப்படங்கள் சேர்ப்பது வழக்கம் ஆகிவிட்டது. அதன்படி டீ தூளுக்கு பதிலாக மரத்தூள், மிளகுக்குப் பதிலாக பப்பாளி விதை உள்ளிட்ட ஏராளமான கலப்பட பொருட்கள் பயன்படுத் தப்பட்டு வருகிறது. இதனை அவ்வப்போது உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளும் கண்டறிந்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் சர்வதேச உணவு பாதுகாப்பு தினத்தையொட்டி தமிழக அரசின் உணவு பாதுகாப்பு துறையின் சார்பாக சென்னை, எழும்பூர், அண்ணா நகர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஹோட்டல்களில் நேற்று திடீர் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதனையடுத்து உணவுகளில் செயற்கை நிறம் சேர்ப்பது தவறு. உணவில் தரமில்லாது மற்றும் கலப்பட பொருட்களை விற்பனை செய்வது தொடர்பாக புகார் அளிக்க 9444042322 என்ற எண்ணில் பொதுமக்கள் புகார் அளிக்கலாம். இந்த புகாரின் அடிப்படையில் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.