மதுரை திடீர் நகர் அருகே சந்தனமாரியம்மன் கோயிலில் நடந்த வைகாசி திருவிழாவில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. மதுரை திடீர் நகர் அருகே மேலவாசலில் சந்தனமாரியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் வைகாசி திருவிழா ஆண்டுதோறும் கொண்டாப்படுகிறது. அந்தவகையில் இந்தாண்டு வைகாசி திருவிழா நடைபெற்றுவருகிறது.
இந்நிலையில் திருவிழாவின் ஒரு பகுதியாக தீ பந்த விளையாட்டு நிகழ்வு நடைபெற்றது. அப்போது இளைஞர்கள் வெடித்த பட்டாசு பந்தலில் பட்டதால் தீவிபத்து ஏற்பட்டது. இது மளமளவென பரவியதால் அந்தப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.