Categories
மாநில செய்திகள்

மக்களே….! “குறைந்த கட்டணத்தில் இணைய வசதி”….. தமிழக அரசு வேற லெவல் திட்டம்….!!!!

குறைந்த விலையில் இணைய வசதி என்ற திட்டத்தை மக்கள் மத்தியில் அமைச்சர் அறிமுகம் செய்துள்ளார்.

தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் நாகர்கோவிலில் நேற்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது தமிழகத்தில் 12, 625 ஊராட்சிகளிலும் இணைய வசதி ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்ட திட்டம் 2018ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட இருக்க வேண்டும். அதிமுக அரசின் தவறான செயலால் இந்த திட்டம் நிறைவேறாமல் போனது. மேலும் இரண்டு வழக்குகள் நிலுவையில் இருந்தது. இந்நிலையில் இரண்டு வழக்குகளையும் முடிவுக்கு கொண்டு வந்து இந்த திட்டம் நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு சர்வே பணிகள் நிறைவடைந்து விட்டது.

இன்று தமிழக முதல்வரால் இந்த திட்டம் துவங்கி வைக்கப்பட உள்ளது. வரும் பத்து மாதங்களுக்குள் தமிழகத்தின் அனைத்து கிராமங்களிலும் இணைய வசதியை முழுமையாக கிடைக்கும் வகையில் இந்த திட்டம் நிறைவேற்றப்படும். ஒவ்வொரு ஊராட்சியிலும் ஒரு அரை ஏற்படுத்தப்பட்டு மூன்று கிலோ மீட்டர் சுற்றளவுக்கு இணையத்தை பயன்படுத்தும் வகையில் இந்த திட்டம் அமையும்.  இத்திட்டம் அரசால் நிறுவப்படுவதால் கட்டணம் குறைந்த அளவிலேயே அமைக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |