ராணுவ மந்திரியான ராஜ்நாத் சிங் வியட்நாமிற்கு அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார்.
வியட்நாம் நாட்டிற்கு ராஜ்நாத் சிங் மூன்று நாட்கள் அரசு முறை பயணம் மேற்கொண்டிருக்கிறார். நேற்று புறப்பட்ட அவர் நாளை வரை அவர் அங்கு தங்கியிருந்து பல நிகழ்வுகளில் கலந்து கொண்டு இரு தரப்பு உறவுகளை மேம்படுத்தும் பணிகளை மேற்கொள்ளவிருக்கிறார். வியட்நாம் நாட்டின் தேசிய பாதுகாப்பு மந்திரி ஜெனரலான ஃபான் வான் ஜியாங்-உடன் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
இரண்டு நாடுகளுக்கு இடையேயான பாதுகாப்பை மேம்படுத்துவது குறித்தும் உலக நாடுகளின் பிரச்சினை தொடர்பிலும் பேசியுள்ளனர். மேலும் வரும் 2030ஆம் வருடத்திற்கான இந்தியா-வியட்நாம் பாதுகாப்பு கூட்டாண்மை பற்றிய கூட்டு பார்வைக்கான அறிக்கை ஒன்றிலும் கையொமிட்டுள்ளார்.