Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

பயங்கர சம்பவம்… வாலிபர் அடித்துக்கொலை…. மர்ம நபர்களின் வெறிச்செயல்…. போலீஸ் வலைவீச்சு…!!!!

பணகுடியில் வாலிபர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம், பணகுடி மங்கம்மாள் சாலை பகுதியில் வசித்து வருபவர் ராமன் என்பவருடைய மகன் 23 வயதுடைய பசுபதி. இவர் வேன் ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். இவர் நேற்று முன்தினம் இரவு வழக்கம்போல் வேலைக்கு சென்றுவிட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தபோது மது அருந்தி உள்ளார். இந்நிலையில் பணம் குடியில் உள்ள ஒரு கோவில் பின்பக்கம் பாழடைந்த வீட்டில் பசுபதி உடலில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் இதுகுறித்து உடனே பணகுடி காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்கள். இப்புகாரின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பசுபதி உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இது குறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் வேலை முடித்து விட்டு பசுபதி வரும்போது மர்ம நபர்கள் கஞ்சா போதையில் வந்துள்ளனர். அப்போது அவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனையில் பசுபதியை மர்ம நபர்கள் அடித்து கொலை செய்து இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது. ஆனாலும் மர்மநபர்கள் பிடிப்பட்ட பின் தான் கொலைக்கான காரணம் என்ன என்று தெரியவரும் என்று போலீசார் கூறினார்கள். இந்த கொலை குறித்து பணங்குடி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |