Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு பள்ளிகளில் மீண்டும்….. அமைச்சர் வெளியிட்ட அதிரடி அறிவிப்பு….!!!!!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தியில், தமிழகத்தில் 2,381 அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் அமைந்த அங்கன்வாடி மையங்கள் பரிசோதனை அடிப்படையில் எல் கே ஜி, யுகேஜி வகுப்புகளாக மாற்றப்பட்டு சில வருடங்களாக நடைபெற்று வருகிறது.

இதற்கு முந்தைய ஆட்சிக் காலத்தில் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையின் எண்ணிக்கை மிகவும் குறைந்து இருந்த காரணத்தால் கூடுதல் எண்ணிக்கையில் இருந்த ஆசிரியர்கள் எல்கேஜி யூகேஜி வகுப்புகளை எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்தனர். ஆனால் அரசுப் பள்ளிகளின் தரத்தை உயர்த்த கடந்த ஓராண்டாக அரசு எடுத்து வரும் பல்வேறு சிறப்பு முயற்சிகளின் காரணமாக சுமார் 7 லட்சம் மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டில் மட்டும் மாநிலம் முழுவதும் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் பல்வேறு அமைப்புகளில் புதிதாக சேர்ந்துள்ளனர்.

அதனால் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக கடந்த கல்வியாண்டில் 3000 வகுப்புகள் தொடங்கப்பட்டன. இந்நிலையில் அதிக மாணவர் சேர்க்கையினால் அரசு பள்ளிகளில் ஆசிரியர்களின் தேவை அதிகரித்ததை தொடர்ந்துஎல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளில் பாடம் எடுக்க அனுப்பி வைக்கப்பட்டிருந்த ஆசிரியர்கள் பணிமாறுதல் மூலமாக ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு களுக்கு ஆசிரியர்களாக சமீபத்தில் சென்று உள்ளனர். இருந்தாலும் சம்பந்தப்பட்ட அங்கன்வாடி மையங்களில் குழந்தைகள் தொடர்ந்து அவர்களது கல்வியை தங்கு தடை இன்றி பெறுவதற்கு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்நிலையில் எல்கேஜி மற்றும் யூகேஜி வகுப்புகளை அரசு பள்ளிகளில் தொடர்ந்து நடத்திட வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வந்தனர்.அந்தக் கோரிக்கையை ஏற்று தமிழக முதலமைச்சரின் அறிவுரை கிணங்க அரசு பள்ளிகளில் எல்கேஜி யுகேஜி வகுப்புகள் தொடர்ந்து நடைபெற பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. அதற்கான தகுதியான சிறப்பாசிரியர்கள் தேவையான இடங்களில் நியமிக்கப்படுவர் என்று அமைச்சர் அறிவித்துள்ளார்.

Categories

Tech |