Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு…. வானிலை ஆய்வு மையம் அலர்ட்….!!!!

தமிழகத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்ப சலனம் காரணமாக வரும் 13ஆம் தேதி வரை 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி உள்ளதால் அதன் எதிரொலியாக தமிழகத்தில் ஒருசில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். மத்தியகிழக்கு அரபிக்கடல், லட்சத்தீவு, வட கேரளா,கர்நாடக கடலோரப் பகுதிகளில் பலத்த காற்று வீச வாய்ப்பு உள்ளதால் அந்த பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |