தென் கொரியா நாட்டில் டேகு நகரில் உள்ள மாவட்ட நீதிமன்றத்தின் பின்புறத்தில் 7 மாடி கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் இருந்த அலுவலகத்தில் திடீரென தீப்பற்றியது. இந்த தீ விபத்து கண்ணிமைக்கும் நேரத்தில் அலுவலகம் முழுவதும் மலமலவென பரவியது. இந்த சம்பவம் குறித்து தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.
இந்த தீ விபத்தில் 7 பேர் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 35 மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அருகில் உள்ள மருத்துவ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அதில் 9 க்கும் மேற்பட்டவர்களின் நிலைமை மிக மோசமாக உள்ளது. மேலும் தீ விபத்து ஏற்பட்ட காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.