இந்தியாவின் மிகப்பெரிய விமான போக்குவரத்து சேவை நிறுவனமான இண்டிகோ விமான டிக்கெட்டுகளை தள்ளுபடி சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சலுகை மூத்த குடிமக்களுக்கு மட்டுமே அறிவித்துள்ளது. அதாவது இன்டிகோ விமானங்களில் டிக்கெட் புக்கிங் செய்யும் 60 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு டிக்கெட் விலையில் 10% தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது. www.goindigo.in என்ற இணையதளத்தில் சென்று டிக்கெட் புக்கிங் செய்யலாம். ‘The Golden Age’ என்ற பெயரில் இந்த சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து 2022ஆம் ஆண்டு செப்டம்பர் 30ஆம் தேதி வரை மட்டுமே இந்தச் சலுகை மூத்த குடிமக்களுக்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு வழக்கமான டிக்கெட் விலையில் தான் பயணிக்க வேண்டும். டிக்கெட் புக்கிங் செய்யும் போது பயணிக்கும் மூத்த குடிமக்கள் தங்கள் வயதுக்கான சான்றாக அதிகாரப்பூர்வமாக அடையாள அட்டையை காண்பிக்க வேண்டும். இந்த சலுகை கீழ் மூத்த குடிமக்கள் லக்கேஜ் எடுத்துச் செல்வதற்கும் கட்டுப்பாடு உள்ளது. செக்கிங் செய்யும் பொது ஒரு நபர் 15 கிலோ எடை கொண்ட லக்கேஜ் மட்டுமே எடுத்து செல்ல முடியும். ஹேண்ட் பேக்காக இருந்தால் அதன் எடை 7 கிலோ வரை மட்டுமே இருக்க வேண்டும். ட மேலும் டிக்கெட் முன்பதிவு செய்த பிறகு வேண்டுமென்றால் கேன்சல் செய்து கொள்ளும் வசதியும் உள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.