Categories
உலக செய்திகள்

அமெரிக்காவில் தொடரும் தாக்குதல்கள்… துப்பாக்கி வாங்க வயது வரம்பு அதிகரிப்பு…!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கிகள் வாங்கக்கூடிய வயது வரம்பை அதிகரிக்கக்கூடிய வகையில் சட்டம் கொண்டு வரப்பட்டிருக்கிறது.

அமெரிக்க நாட்டில் சமீப நாட்களாக துப்பாக்கிச்சூடு கலாசாரம் அதிகரித்துக் கொண்டிருக்கிறது. நாட்டில் தொடர்ந்து பள்ளிகள் மற்றும் பொது வெளிகளில் மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்துகின்றனர். இது மட்டுமல்லாமல் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களும் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்துவதும் அதிகரித்தது.

இதனை தடுக்கும் வகையில் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும் என்று பல தரப்பு மக்களும் வலியுறுத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில், குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் என்னும் பெயரில் நாட்டின் நாடாளுமன்ற கீழவையில் மசோதா நிறைவேற்றப்பட்டிருக்கிறது. துப்பாக்கி வாங்கும் நபர்கள் சிறுவர்களுக்கு தெரியாத வகையில் பாதுகாப்புடன் வைத்திருக்க வேண்டும் என்று இம்மசோதா உறுதிப்படுத்துகிறது.

மேலும் துப்பாக்கி வாங்க கூடிய குறைந்தபட்ச வயது வரம்பு 18-லிருந்து 21 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

Categories

Tech |