டெம்போ ஓட்டுநர் தலையில் கல்லை போட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள ஊமகவுண்டம்பட்டி பகுதியில் செந்தில்குமார்(43) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் டெம்போ ஓட்டுனர் ஆவார். இவருக்கு சங்கீதா(30) என்ற மனைவியும், தேவராஜ்(14) என்ற மகனும் இருக்கின்றனர். கடந்த 10 ஆண்டுகளாக கருத்து வேறுபாடு காரணமாக கணவன் மனைவி இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் நீண்ட நேரமாகியும் செந்தில்குமார் வீட்டில் இருந்து வெளியே வராததால் சந்தேகம் அடைந்த அக்கம் பக்கத்தினர் வீட்டிற்குள் சென்று பார்த்தனர். அப்போது தலையில் ரத்த காயத்துடன் செந்தில்குமார் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் செந்தில்குமாரின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் செந்தில்குமாரை கொலை செய்தவர்கள் யார்? எதற்காக அவரை கொலை செய்தார்கள்? என்பது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.