லோகேஷ் கனகராஜ் பிரபல நடிகரை வைத்து புதிய படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் ”மாநகரம்” படத்தை இயக்கியதன் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் லோகேஷ் கனகராஜ். இதனயடுத்து கார்த்தி நடிப்பில் ”கைதி” படத்தை இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. இதனைதொடர்ந்து தளபதி விஜய்யை வைத்து ‘மாஸ்டர்’ படத்தை இயக்கினார்.
இந்தப் படமும் நல்ல விமர்சனங்களுடன் வெற்றியடைந்தது. அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்த லோகேஷ் கனகராஜ் கமலை வைத்து ”விக்ரம்” படத்தை இயக்கினார். இந்த படத்தில் கமல்ஹாசனுடன் இணைந்து பகத் பாசில், விஜய் சேதுபதி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தனர்.
சமீபத்தில் வெளியான இந்த திரைப்படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. இந்நிலையில், லோகேஷ் கனகராஜ் அடுத்ததாக பிரபல நடிகரை வைத்து புதிய படம் இயக்குவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தை வைத்து ‘தலைவர் 170’ படத்தை இயக்க இருப்பதாக சூப்பரான அப்டேட் வெளியாகியுள்ளது.