Categories
சேலம் மாவட்ட செய்திகள்

கிடைத்த ரகசிய தகவல்…. தடுத்து நிறுத்தப்பட்ட சிறுமியின் திருமணம்…. போலீஸ் அதிரடி…!!

சிறுமிக்கு திருமணம் நடத்த முயன்ற பெற்றோர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

சேலம் மாவட்டத்திலுள்ள செங்கனூர் பகுதியில் 13 வயது சிறுமி வசித்து வருகிறார். இந்த சிறுமிக்கு திருமணம் நடைபெற இருப்பதாக மாவட்ட சமூக நல அலுவலர் ரஞ்சிதா தேவிக்கு தகவல் கிடைத்துள்ளது. இதுகுறித்து ரஞ்சிதா தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில் 13 வயது சிறுமிக்கு திருமணம் நடைபெற இருந்தது உறுதியானது. உடனடியாக காவல்துறையினர் அந்த திருமணத்தை தடுத்து நிறுத்தினர். மேலும் மணமகன், சிறுமியின் பெற்றோர் உள்பட 5 பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

Categories

Tech |