உக்ரைனுக்கு ராணுவ உதவி அளித்ததற்காக அமெரிக்க நாட்டை ரஷ்யா கடுமையாக சாடியுள்ளது.
ரஷ்யா, உக்ரைன் நாட்டின் மீது 100 நாட்களை கடந்து தீவிரமாக போர் தொடுத்து கொண்டிருக்கிறது. இதில் உக்ரைன் நாட்டிற்கு ஐரோப்பிய நாடுகளும், அமெரிக்காவும் ஆயுத உதவிகளை செய்து வருகின்றன. இதற்கிடையில் வியன்னாவில் நடந்த ராணுவ பாதுகாப்பு மற்றும் ஆயுத கட்டுப்பாடு தொடர்பிலான பேச்சுவார்த்தையில் கலந்துகொண்ட ரஷ்ய தரப்பு தெரிவித்ததாவது, மேற்கத்திய நாடுகள் உக்ரைன் நாட்டிற்கு அளிக்கும் ஆயுதங்கள் கள்ளச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது.
இது மட்டுமல்லாமல் அந்த ஆயுதங்கள் சிரிய நாட்டின் இட்லிப் நகரம் போன்ற மத்திய கிழக்கு நாடுகளுக்கும் விற்பனை செய்யப்படுகின்றன. அதற்கு எங்களிடம் ஆதாரங்கள் இருக்கிறது என்று கூறியிருக்கிறது. மேலும் உக்ரைன் நாட்டிற்கு அமெரிக்கா ராணுவ உதவிகள் அளித்ததை கண்டித்திருக்கிறது.