Categories
தேசிய செய்திகள்

மீனுக்கு போட்ட தூண்டிலில்…. சிக்கிய 2 பெண் சடலம்…. வெளியான திக் திக் சம்பவம்….!!!!

கர்நாடக மாநிலம், மண்டியா மாவட்டம் பாண்டவபுரா தாலுகாவில் உள்ள பேபி கிராமத்தில், கால்வாய் ஒன்று ஓடுகிறது. இந்த கால்வாயில், 30 வயது மதிக்கத்தக்க ஒரு பெண்ணின் சடலம் நிர்வாண நிலையில் மிதந்தபடியே வந்தது. ஆனால், பெண்ணின் உடல் பாதியளவு மட்டுமே இருந்தது. அதாவது, இடுப்புக்கு கீழ் பகுதியை காணோம். கால்வாயில் இப்படி ஒரு கோலத்தை பார்த்த பேபி கிராம மக்கள் அலறி அடித்து கொண்டு ஓடினார்கள்.

இதேபோல் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா அரகெரே கிராமத்தை சேர்ந்தவர் சிக்க தேவராஜா.இவர் ஒரு விவசாயி. இவருக்கு சொந்தமான நிலத்தில் பண்ணைக் குட்டை ஒன்று உள்ளது. இந்த குட்டையில் கிராம மக்கள் அடிக்கடி வந்து மீன்பிடிப்பார்கள். அந்த வகையில், ஒரு இளைஞர் வந்து, பண்ணை குட்டையில் மீன் பிடிப்பதற்காக தூண்டில் வீசினார். ஆனால், தூண்டிலில் மீன் சிக்கவில்லை.. அதற்கு பதிலாக, பெண்ணின் நிர்வாண உடல் சிக்கி கொண்டது. அந்த உடம்பும் பாதிதான் இருந்தது. அதுவும் இடுப்புக்கு கீழ் துண்டிக்கப்பட்டு இருந்தது.

ஆனால், இந்த பெண் வேறு. 2 கிராமங்களிலும், 2 வேறு சடலங்களின் துண்டுகளை பார்த்து கதிகலங்கி போன, மாவட்ட கன்ட்ரோல் ரூமுக்கு தகவல் சொன்னார்கள். இதையடுத்து, பாண்டவபுரா மற்றும் அரகெரே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசாருக்கு இது ஒரு சவாலாக இருக்கிறது. கொலை செய்யப்பட்டுள்ள 2 பெண்களின் தலைபகுதிகளை கொலைக்காரர்கள் கையோடு எடுத்து சென்றார்கள்? அல்லது எங்கேயாவது வீசி சென்றார்களா? என்றும் தேடி கொண்டிருக்கிறார்கள். இந்த கொலை சம்பவம் மண்டியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Categories

Tech |