Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு…. பெண் எடுத்த விபரீத முடிவு…. சாவில் சந்தேகம் இருப்பதாக பெற்றோர் புகார் மனு….!!

போலீஸ்காரரின் மனைவி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள ஒட்டன்சத்திரம் பகுதியில் ராதாகிருஷ்ணன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு வினீத்பாலாஜி என்ற மகன் உள்ளார். இவர் ஊட்டி நகர் காவல் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். கடந்த ஆண்டு வினீத் பாலாஜிக்கும் சீலப்பாடி என்.ஜி.ஜி.ஓ. காலனியில் வசிக்கும் முத்துப்பாண்டீஸ்வரிக்கும் திருமணம் நடைபெற்றது, இதனையடுத்து திருமணத்திற்குப் பின் இருவரும் காவலர் குடியிருப்பில் தனியாக வசித்து வந்தனர். ஆனால் அங்கு இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் காவலர் குடியிருப்பில் திடீரென முத்துப்பாண்டீஸ்வரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று முத்துபாண்டீச்வரியின் உடலை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர் இதுகுறித்து முத்துபாண்டீஸ்வரியின் பெற்றோர் என் மகளின் சாவில் சந்தேகம் இருப்பதாக புகார் மனு கொடுத்துள்ளார். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது, எங்களது மகளின் திருமணத்திற்கு 18 பவுன் நகை மற்றும் ரூ 20 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவற்றுடன் சேர்த்து வீட்டு உபயோக பொருட்களையும் கொடுத்துள்ளோம். ஆனாலும் என் மகளிடம் இருசக்கர வாகனம் மற்றும் பணம் கேட்டு கொடுமை படுத்தியுள்ளனர். எனவே எனது மகளை கொடுமைப்படுத்தியவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |