திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் பல்வேறு தொழில் பிரிவை சேர்ந்த ஐடிஐ பாலிடெக்னிக் மற்றும் பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கு தொழில் பழகுனர் சேர்க்கைக்கான முகாம் வரும் 13-ம் தேதி நடைபெற உள்ளதாக ஆட்சியர் ஆல் பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில் அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: “இந்த அலுவலகம் சார்பில் தொழிற்பயிற்சி முடித்தவர்களுக்கு தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடத்தி வாய்ப்பு வழங்கப்படுகிறது.
அதேபோல் அம்பத்தூர் அரசு ஐடிஐ வளாகத்தில் பல்வேறு தொழில் பிரிவுகளை சேர்ந்த தொழிற்பயிற்சி, நிலைய பயிற்சியாளர்கள், பாலிடெக்னிக் கல்லூரி மற்றும் பள்ளி மாணவர்களுக்கான தொழில் பழகுநர் சேர்க்கை முகாம் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் மத்திய மாநில அரசு நிறுவனங்கள் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொழில் நிறுவனங்களின் கூட்டமைப்புகள் பங்கேற்க உள்ளன. இதில் இளைஞர்கள் தொழில் பழகுநர் பயிற்சியில் சேர்ந்து பயன் பெறலாம். இதுகுறித்து உதவி இயக்குனர் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் திருவள்ளூர் அவர்களை நேரிலோ அல்லது இணையதளத்தின் மூலமாகவோ தொடர்பு கொள்ளலாம். 9499055663, 9444224363, 9444139373, 9444665884 ஆகிய செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு விவரங்களை அறியலாம் என அவா் தெரிவித்துள்ளாா்.