நாட்டு வெடிகுண்டு வெடித்து பசுமாடு காயமடைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நீலகிரி மாவட்டத்தில் உள்ள வெலிங்கடன் ஆஸ்பத்திரி சேரி குடியிருப்பு பகுதியில் ஆபி என்பவர் வசித்து வருகிறார். இவர் தனக்கு சொந்தமாக 2 பசுமாடுகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் ஆபி வீட்டின் அருகில் உள்ள நிலத்தில் தனது மாடுகளை மேய விட்டிருந்தார். அப்போது திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது. இதனால் பதற்றமடைந்த அபு மற்றும் பொதுமக்கள் அங்கு விரைந்து சென்று பார்த்தனர்.
அப்போது நாட்டு வெடிகுண்டை பசுமாடு கடித்ததால் வெடித்து வாயில் காயம் ஏற்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் மர்மநபர்கள் காட்டு பன்றியை பிடிப்பதற்காக புல்வெளி பகுதியில் நாட்டு வெடிகுண்டை மறைத்து வைத்திருந்ததும் தெரிய வந்துள்ளது. இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.