தமிழ் சினிமா உலகில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகின்ற நயன்தாரா, நானும் ரவுடிதான் திரைப்படத்தில் இயக்குனர் விக்னேஷ்சிவனுடன் இணைந்து பணியாற்றும் பொழுது இருவருக்குள்ளும் காதல் மலர்ந்தது. ஆறு வருடங்களாக இவர்கள் காதலித்து வந்தார்கள். இந்த நிலையில் நீண்ட எதிர்பார்ப்புக்கு பின் சென்னையில் உள்ள ஈசிஆரில் இருக்கும் ஷெரட்டன் கிராண்ட் ஸ்டார் ஹோட்டலில் இவர்களின் திருமணம் நேற்று காலை 10.25 மணிக்கு நடைபெற்றது.
விக்னேஷ் சிவன், நயன்தாரா தம்பதியினர் அவர்களின் திருமணத்திற்காக மாறி மாறி பரிசுகள் வழங்கி கொண்டு மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருமணத்தின்போது நயன்தாரா அணிந்திருந்த வைர மோதிரம் ஐந்து கோடி மதிப்புள்ளது. எமரால்ட், வைர நகைகள், தாலி உள்ளிட்டவை அனைத்தும் சுமார் 3 கோடி மதிப்புள்ளது. இவை அனைத்தையும் தனது காதல் பரிசாக நயன்தாராவுக்கு விக்கி வழங்கியுள்ளார். விக்கிக்காக நயன்தாரா 20 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்களாவை பரிசாக கொடுத்துள்ளாராம்.