Categories
உலக செய்திகள்

உக்ரைன் ரஷ்யா போர்…. உருக்குலைந்த பள்ளிமுன்…. பட்டம் பெற்ற மாணவர்கள் நடனம்…. வைரல்….!!!

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளதால் உலகளாவிய நெருக்கடிகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த போரால் பல ஆண்டுகளுக்கு நீட்டிக்க கூடிய உணவு பொருட்களில் நெருக்கடி ஏற்படும் என்று ஐநா சபை எச்சரித்துள்ளது. அதுமட்டுமில்லாமல் உக்ரைன் துறைமுகங்களில் இருந்து சமையல், எண்ணெய் மாவு பொருட்கள் ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்தப் போரின் காரணமாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இந்நிலையில் உக்ரேன் கார்கீவில் உள்ள பள்ளியில் இறுதியாண்டு கல்வியை முடித்த மாணவர்கள் பட்டம் பெற்றனர்.  அப்போது பள்ளியில் நடைபெறும் நிகழ்வுகளை நினைவு கூறும் வகையில் போரால் உருக்குலைந்து காட்சியளிக்கும் தங்கள் பள்ளியின் முன் மாணவர்கள் நடனம் ஆடி கொண்டாடினர்.

Categories

Tech |