Categories
சென்னை மாவட்ட செய்திகள்

உன்னை நான் கைது செய்ய வைப்பேன்…. வாலிபரின் விபரீத முடிவு…. தீவிர விசாரணையில் போலீஸ்….!!!!

தூக்கிட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

சென்னை மாவட்டத்தில் உள்ள லட்சுமி நகர் பகுதியில் சுதாகர் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு மகேஸ்வரி என்ற மனைவியும், 2 மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சுதாகர் கொளத்தூர் பகுதியை சேர்ந்த மைதிலி என்பவரிடம் வீடு கட்டுவதற்காக நிரப்பப்படாத காசோலையை கொடுத்து 2 லட்ச ரூபாய் கடன் பெற்றுள்ளார். ஆனால் மைதிலி அந்த காசோலையில்  10 லட்சம் பெற்றதாக நிரப்பி  காசோலை மோசடி வழக்கில் கைது செய்த ஏற்பாடு செய்கிறேன் என சுதாகரை மிரட்டியுள்ளார்.

இதனால் மன உளைச்சலில் இருந்த சுதாகர் வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சுதாகரின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மைதிலியை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories

Tech |