இதிகாச நூலான ராமாயண கதையில் பல இடங்களில் லாஜிக் இல்லாத போது தம்முடைய படத்தில் லாஜிக் இல்லை என்று கேட்பது ஏன் என திரைப்பட இயக்குனர் மிஸ்க்கின் ரசிகர்களை கடுமையாக சாடியுள்ளார்.
சிபிராஜ் நடித்த வால்டர் என்ற படத்தின் அறிமுக விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பேசிய இயக்குனர் மிஷ்க்கின் தம்முடைய படங்களில் லாஜிக் இல்லை என்று ரசிகர்கள் விமர்சிப்பதாக கூறினார். ராமாயணத்தில் அடுத்தவன் மனைவியை தூக்கி சென்ற ராவணன் சண்டையிட்டது என்ன லாஜிக் இருக்கிறது என்றும் அதற்கு ஆதரவாக கும்பகர்ணன் சண்டையிட்டது என்ன லாஜிக் இருக்கிறது என்றும் கேள்வி எழுப்பினார்.