கோழி குழம்பு வைக்க வில்லை என்ற காரணத்தினால் மனைவியை கொலை செய்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் தாவணகரே ஹரிஹரன் பன்னிக்கோடு கிராமத்தில் கெஞ்சப்பா(34) என்பவர் வசித்துவருகிறார். இவரது மனைவி ஷீலா(28). 9 வருடங்களுக்கு முன் இவர்கள் இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில் மது போதைக்கு அடிமையான கெஞ்சப்பா தினமும் குடிபோதையில் வந்து மனைவியுடன் தகராறில் ஈடுபடுவார். அதேபோல் நேற்றுமுன்தினம் இரவு மது அருந்திவிட்டு வீட்டுக்கு வந்துள்ளார்.
அப்போது மனைவியிடம் கோழிக்குழம்பு செய்து தரும்படி கேட்டுள்ளார். இதனால் இரண்டு தம்பதிகளுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த கெஞ்சப்பா மனைவியை கத்தியால் கழுத்தில் குத்தி கொலை செய்துள்ளார். இதனை தொடர்ந்து கத்தியுடன் போலீஸ் நிலையத்திற்கு சென்று சரண் அடைந்துள்ளார். இந்நிலையில் அவரை கைது செய்து ஹரிஹரா போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.