நாடு முழுவதும் கடந்த 2020ஆம் ஆண்டுக்கு கொரோனா பரவல் பரவ தொடங்கியது. இதனால் முழு ஊரடங்கு அமலில் இருந்தது. அதன் பிறகு கொரோனா பரவல் கணிசமான அளவு குறைந்த பிறகு ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் வட மாநிலங்களில் மீண்டும் கொரோனா தொற்று பரவ தொடங்கியுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் வெளிநாடுகள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து இந்தியாவிற்கு வந்த 185 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது. இந்த புதிய எண்ணிக்கை தமிழகத்தில் கூட தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதன்படி தலைநகர் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய பகுதிகளிலும் பாதிப்புகள் சற்று அதிகமாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனை கருத்தில் கொண்டு வருகின்ற ஜூன் 12ஆம் தேதி அன்று தமிழகம் முழுவதும் நடைபெற இருக்கும் கொரோனா தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். அதுமட்டுமில்லாமல் பொதுமக்கள் அனைவரும் பொது இடங்களில் முகக்கவசங்களை அணிந்துகொண்டு சமூக இடைவெளியை பராமரிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. அதனைப் போல தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் முறையான சுகாதார முறைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் பட்சத்தில் மீண்டும் ஒரு முழு ஊரடங்கு குறித்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது.