வாட்ஸ்அப் நிறுவனம் தங்களது பயனாளர்களை கவர வேண்டும் என்பதற்காக அடிக்கடி புதிய புதிய அப்டேட்களை கொடுத்து வருகின்றது. கடந்த சில தினங்களுக்கு முன்பாக டெலிட் செய்த மெசேஜை மீட்டு எடுப்பதற்கு வசதியாக UNDO என்ற ஆப்ஷன் சேர்க்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல் வாட்ஸ் அப் தளத்தில் பிரத்தியேகமாக எடிட் செய்யும் ஆப்ஸனையும் வழங்கியிருந்தது.
தற்போது புதிதாக தனது பயனாளர்களை கவரும் வகையில் அட்டகாசமான அப்டேட்டை அறிமுகம் செய்துள்ளது. இனி வாட்ஸ்அப் குரூப்களில் 256 க்கு பதிலாக 512 பேர் வரை சேர்க்கலாம். 2ஜிபி வரையில் போட்டோ வீடியோ உள்ளிட்ட ஆவணங்களை ஷேர் செய்யலாம். வீடியோ காலில் 32 பேர் வரை ஒரே நேரத்தில் குரூப் சாட் செய்யலாம் என்று அறிவித்துள்ளது. இதனால் வாட்ஸ்அப் பயனாளர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.