Categories
தேசிய செய்திகள்

தமிழக மக்களே…. வரும் 15ஆம் தேதி முதல் திருப்பதி செல்ல பேருந்து…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதனால் பக்தர்களின் வசதிக்காக சென்னையிலிருந்து தினம்தோறும் திருப்பதிக்கு பேருந்து போக்குவரத்து ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு சுற்றுலாத்துறை சார்பாக திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்வதற்காக வருகின்ற 15ஆம் தேதி முதல் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தரிசனம் செய்ய விருப்பமுள்ள பக்தர்கள் தமிழ்நாடு டூரிசம் என்ற ஆன்லைன் முகவரியில் முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் 300 ரூபாய் ஆன்லைன் தரிசன டிக்கெட் உடன் பேருந்து போக்குவரத்து கட்டணத்துடன் முன்பதிவு செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு திருப்பதி செல்லும் பக்தர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |