Categories
உலகசெய்திகள்

சர்வதேச நிதியத்தின் இயக்குனராக இந்தியர்…. யார் தெரியுமா….?

சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய பசுபிக் துறையின் இயக்குனராக பணியாற்றிய  சான்கியாங் ரீ கடந்த மார்ச் மாதம் 23ஆம் தேதி ஓய்வு பெற்றுள்ளார். அதனைத் தொடர்ந்து அந்த இடம்  காலியாக இருந்தது. இந்த நிலையில் தற்போது துணை இயக்குனராக உள்ள கிருஷ்ணா சீனிவாசன்  இயக்குனராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவர் 22ஆம் தேதி பொறுப்பை ஏற்றுக் கொள்கின்றார். அதனை ஐஎம்எப் நிர்வாக இயக்குனர் கிருஷ்டலீனா   ஜார்ஜியவா  அவர் நேற்று அறிவித்துள்ளார்.

கிருஷ்ணா சீனிவாசன் இந்திய பொருளாதார நிபுணராக இவர் டெல்லியில் பொருளாதாரத்தில் இளங்கலை முதுகலை பட்டப்படிப்பு படித்து முடித்து இருக்கின்றார். மேலும் சர்வதேச நிதியத்தில் 27 வருடங்களாக பணியாற்றியிருக்கின்றார். அதற்கு முன்பாக இந்திய அண்ணா பல்கலைக்கழகத்தில் உதவி பேராசிரியர் ஆகவும் உலக வங்கி ஆலோசகராகவும் இருந்து இருக்கின்றார்.

Categories

Tech |