கிருஷ்ணகிரி அருகே 2 மாணவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளதா என சோதனை நடத்தப்பட்டு வருகிறது.
கிருஷ்ணகிரியை சேர்ந்த இரண்டு மாணவர்கள் சீன நாட்டில் படித்து வந்த நிலையில்,கொரோனா வைரஸ் பாதிப்பு நிலவி வருவதால் நடவடிக்கைக்கு சொந்த ஊருக்கு சீன அரசால் அனுப்பப்பட்டுள்ளனர். சொந்த ஊருக்கு வந்த இவர்களுக்கு கொரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை மருத்துவ குழு ஒன்று பரிசோதனை செய்து வருகிறது.
20 நாட்களுக்கும் மேலாக வெளியே அவர்களை அனுப்பாமல் ஒரே இடத்தில் வைக்கப்பட்டு பரிசோதனை செய்யப்படும் என மருத்துவ குழு தெரிவித்துள்ளது. இந்நிலையில் காய்ச்சலுக்கான அறிகுறிகள் ஏதேனும் இருக்கிறதா என்று சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.