Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

உலக சுற்றுச்சூழல் தின விழா….”வருகின்ற 5 வருடங்களில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுவதாக இலக்கு”…. மேயர் சத்யா தகவல்…!!!!

உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி வருகின்ற 5 வருடங்களில் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக மேயர் சத்யா கூறியுள்ளார்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரில் மண் பாதுகாப்பு இயக்கம், கல்குவாரி உரிமையாளர் சங்கம் சேர்ந்து உலக சுற்றுச்சூழல் தினத்தை நடத்தியுள்ளன. ஓசூர் மூக்கண்டபள்ளியில் நடைபெற்ற நிகழ்ச்சியில்  இயக்கத்தின் நிர்வாகி நரசிம்மன் தலைமை தாங்கியுள்ளார். அதில் மாநகராட்சி மேயர் எஸ். ஏ. சத்யா, மாவட்ட புவியியல் மற்றும் சுரங்கத்துறை உதவி இயக்குனர் பொன்மணி, குவாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ். ஆர். சம்பங்கி, நிர்வாகி எம். சத்தியமூர்த்தி ஆகியோர் பங்கேற்று மண் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார்கள்.

மேலும் மேயர் சந்தியா பேசியதாவது, மண் பாதுகாப்பு இயக்கத்திற்கு மாநகராட்சி சார்பாக முழு ஒத்துழைப்பு கொடுக்கப்படும். வருகின்ற ஐந்து வருடங்களில் மாநகராட்சி பகுதியில் ஒரு லட்சம் மரங்களை நட்டு வளர்க்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். இந்த விழாவின்போது முதல்கட்டமாக 15 ஆயிரம் மரக்கன்றுகளை மேயர் சந்தியா நிர்வாகிகளிடம் கொடுத்தார்.

Categories

Tech |