கந்துவட்டி கேட்டு மிரட்டிய 2 பெண்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் குமார் உத்தரவின்படி துணை போலீஸ் கமிஷனர் சுரேஷ்குமாரின் நேரடி மேற்பார்வையில் கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் மேலப்பாளையம் பகுதியில் ரசூல் என்பவர் வசித்து வருகிறார்.
இவரது மனைவி உசேன்பாத் என்பவர் அதே பகுதியில் வசிக்கும் லதா, தெய்வானை ஆகியோரிடம் 4 லட்ச ரூபாய் பணத்தை வட்டிக்கு வாங்கியுள்ளார். அந்தப் பணத்திற்கு லதாவும், தெய்வானையும் இணைந்து கந்து வட்டி கேட்டு தொந்தரவு செய்து மிரட்டியுள்ளனர். இதுகுறித்து உசேன்பாத் மேலப்பாளையம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தலைமறைவாக இருக்கும் லதா மற்றும் தெய்வானை ஆகிய இருவரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.