சென்னை குடிநீர் வாரியம் சார்பாக பகுதி 2 மணலி பகுதிக்கு உட்பட்ட இடையஞ்சாவடி, சடயங்குப்பம், கடப்பாக்கம், வடபெரும்பாக்கம், தீயம்பாக்கம், மாத்தூர் பகுதிகள் மற்றும் பகுதி 14,பெருங்குடி பகுதிக்குட்பட்ட ஜல்லடியான்பேட்டை ஆகிய பகுதிகளுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்கும் திட்டத்தை சென்னை குடிநீர் வாரியம் கொண்டு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே இந்த பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தங்கள் வீடுகளுக்கு https://chennaimetrowater.tn.gov.inஎன்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதற்குரிய கட்டணம் செலுத்தி புதிய குடிநீர் இணைப்புகளை பெற்றுக் கொள்ளலாம். பொதுமக்கள் இது தொடர்பான கூடுதல் விபரங்களை அறிய இந்த எண்களைத் தொடர்புகொள்ளலாம்
பகுதி பொறியாளர்- 2 (மணலி) கைபேசி எண்: 8144930902, துணை பகுதி பொறியாளர் -4 கைபேசி எண்: 8144930204, துணை பகுதி பொறியாளர்-5 கைபேசி எண்: 8144930205, பகுதி பொறியாளர்-14 (பெருங்குடி) உதவி பொறியாளர்-89 துணை பகுதி பொறியாளர்-43 கைபேசி எண்: 8144930914, கைபேசி எண்: 8939855191, கைபேசி எண்: 8144930243 ஆகிய எண்களில் தொடர்புகொள்ளலாம்.