Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

“புதிய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ்குமார் பதவியேற்பு”…. குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்….!!!!!

திருவாரூர் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ் குமார் என்பவர் புதிதாக பதவி ஏற்றுக் கொண்டுள்ளார்.

திருவாரூர் மாவட்ட புதிய போலீஸ் சூப்பிரண்டாக சுரேஷ் குமார் நேற்று பதவியேற்றுக் கொண்டுள்ளார். இவர் திருநெல்வேலி மாவட்டத்தில் துணை போலீஸ் ஆணையராக இருந்த நிலையில் பணி மாறுதல் பெற்று வந்திருக்கின்றார். பதவியேற்ற பின் இவர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தபோது கூறியதாவது, திருவாரூர் மாவட்டம் விவசாயம் சார்ந்ததாக இருக்கின்றது.

திருவாரூரில் பிரச்சனை பெரிதாக இல்லை என்றாலும் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு தேவையான அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளிலும் போலீஸார் ஈடுபடுவார்கள் என தெரிவித்தார். மேலும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். தொடர் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.

Categories

Tech |