வழிப்பறியில் ஈடுபட்ட 2 வாலிபர்களை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருநெல்வேலி மாவட்டத்தில் சதீஷ்குமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் தற்போது பல்லடம் அருகிலுள்ள தனியார் பனியன் நிறுவனத்தில் தங்கியிருந்து வேலை பார்த்து வருகிறார். இந்நிலையில் சதீஸ்குமார் கடந்த 7-ம் தேதி நண்பரைப் பார்க்க காரணம்பேட்டைக்கு சென்று விட்டு அப்பகுதியில் உள்ள நால்ரோடு பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சதீச்குமாரை வழிமறித்த 2 வாலிபர்கள் கத்தியைக் காட்டி மிரட்டி அவரிடம் இருந்த ரூ.3,500 பணத்தை பறித்து சென்றுவிட்டனர். இதுகுறித்து சதீஷ்குமார் பல்லடம் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் காரணம்பேட்டை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது காவல்துறையினர் அந்த வழியாக சென்ற 2 வாலிபர்களை பிடித்து விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்ததால் காவல்துறையினர் காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரித்தனர். அந்த விசாரணையில் அவர்கள் இருவரும் சதீஷ்குமாரிடம் வழிப்பறி செய்தவர்கள் என்பது காவல்துரையினருக்கு தெரியவந்துள்ளது.மேலும் அவர்கள் சிவகங்கை பகுதியில் வசிக்கும் அருண் மற்றும் அதே பகுதியில் வசிக்கும் சக்திவேல் என்பது தெரியவந்துள்ளது. மேலும் இவர்கள் இருவரும் மதனபுரி டவுனில் உள்ள வீடுகளின் பூட்டை உடைத்து 5 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்தது தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து காவல்துறையினர் 2 பேரையும் கைது செய்ததோடு அவர்களிடமிருந்த நகைகளையும் பறிமுதல் செய்தனர்.