கல்லூரி மாணவி திடீரென மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள தலையாரி பாளையம் பகுதியில் கவிதா என்பவர் வசித்து வருகிறார். இவர் தமிழ்நாடு திறந்தவெளி பல்கலைக்கழகத்தில் இளங்கலை 3-ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில் கவிதா சின்னகாவனம் பகுதியில் உள்ள அழகு நிலையத்திற்கு சென்றுள்ளார். ஆனால் நீண்ட நேரம் ஆகியும் கவிதா வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் மாயமான கல்லூரி மாணவியை தேடி வருகின்றனர்.