பின்னிப் பிணைந்திருந்த இரண்டு பாம்புகளை தீயணைப்பு வீரர்கள் பிடித்து காட்டில் விட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள நாட்டறம்பள்ளி அடுத்திருக்கும் கே.பந்தரபள்ளி கல்லுக்குட்டை பகுதியைச் சேர்ந்த பூபதி என்பவருக்கு சொந்தமான இடத்தில் இரண்டு பாம்புகள் பின்னி பிணைந்து கொண்டிருந்தது.
இதை பார்த்த பூபதி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கிறார். இதையடுத்து விரைந்து வந்த ஜெயச்சந்திரன் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் இரண்டு பாம்புகளையும் பிடித்து அருகில் இருக்கும் காட்டில் விட்டார்கள். இதை அப்பகுதி இளைஞர்கள் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டுள்ளனர்.