நேற்று காலை நயன்தாராவுக்கும், விக்னேஷ் சிவனுக்கும் திருமணம் நடந்து முடிந்தது. இந்த திருமணத்திற்கு பல திரையுலக பிரபலங்கள் கலந்துகொண்டனர். திருமணம் முடிந்த கையோடு இன்று திருப்பதி சென்ற நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் சாமி தரிசனம் செய்தனர். அங்கிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்கள் காலையிலிருந்து சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
அதன்பின் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவரையும் புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்த தனியார் நிறுவனத்தின் ஆட்கள் திருப்பதி தேவஸ்தானத்திற்கு செருப்புடன் சென்றுள்ளதாக சர்ச்சையை கிளப்பியுள்ளது. இதனால் நடிகை நயன்தாரா மீது திருப்பதி திருமலை தேவஸ்தானம் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான விஜிலென்ஸ் அதிகாரி கூறியுள்ளார் . இந்த செய்தி ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.