Categories
தேசிய செய்திகள்

வரதட்சணை கொடுமை : “மனைவியின் விரலை வெட்டிய ராணுவ மேஜர்”….. பெரும் அதிர்ச்சி….!!!!

வரதட்சணை கேட்டு மனைவியின் விரலை வெட்டிய ராணுவ மேஜர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரபிரதேச மாநிலம் மீரட் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவர் மீரட்டில் உள்ள 510 ராணுவ தளத்தில் எலக்ட்ரானிக்ஸ் மற்றும் மெக்கானிக்கல் இன்ஜினியர்ஸ் கார்ப்ஸில் அதிகாரியாக உள்ளார். மேஜரின் 30 வயது மனைவி விரலில் காயத்துடன் காவல்துறையை அணுகினார். கணவர் தன்னை மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் துன்புறுத்துவதாக அவர் குற்றம் சாட்டினார்.

அந்தப் பெண்ணின் புகாரின் பேரில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டுள்ளது என்று சதர் பஜார் காவல் நிலையத்தின் எஸ்எச்ஓ டிஎஸ் ராவத் தெரிவித்தார். மீரட் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு சந்திரகாந்த் மீனா கூறுகையில், குற்றம் சாட்டப்பட்டவர் மீது குடும்ப வன்முறை மற்றும் வரதட்சணை கொடுமைக்காக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எட்டு வருடங்களாக குடும்ப வன்முறைக்கு ஆளாகியதாக புகார்தாரர் குற்றம் சாட்டினார். வரதட்சணை உள்ளிட்ட அனைத்து தேவைகளையும் பெற்றோர் பூர்த்தி செய்து வந்தனர்.

ஆனால், கணவர் அதிக வரதட்சணை கேட்டு தொடர்ந்து துன்புறுத்தி வந்தார். இந்த முறை கோபத்தில் என் விரலை அறுத்துவிட்டார் என அந்த புகாரில் மேஜரின் மனைவி கூறியுள்ளார். இந்திய கடற்படையில் இருந்து ஓய்வு பெற்ற பெண்ணின் தந்தை, குற்றவாளி மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரி குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்ய வேண்டாம் என போலீசார் முதலில் அறிவுறுத்தியதாக அவர் குற்றம் சாட்டினார். குற்றம் சாட்டப்பட்டவருடன் ஒரு உடன்பாட்டுக்கு வருமாறு போலீசார் வற்புறுத்தியதாக பெண்ணின் தந்தை குறிப்பிட்டுள்ளார்.

Categories

Tech |